நடிகை மாளவிகா மோகனன் விஜய்சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்பு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில் தனது பிறந்த நாளில் பங்கேற்ற நண்பர்களின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் விஜய்சேதுபதியின் படமும் ஒன்று. என் பிறந்தநாளை மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உருவாக்கிய அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.




