சர்வதேச உடல் உறுப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு “தாயாய் மாற அழகுக்குறிப்பு” என்ற தலைப்பில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதை தற்போது வைரலாகி வருகிறது.
மண்ணில் புதையவும், தீயில் கரியவும், சொர்க்கம் செல்ல உடலை போற்றி புழுக்கவிடுவதும், எத்தகை நியாயம்? ஏதிதில் லாபம்? எனக்கு பின்னால் எலும்பும் தோலும் உறுப்புமெல்லாம் எவருக்கேனும், உயிர்தருமென்றால் அதுவே சித்தி, அதுவே மோட்சம் என்றே நம்பிடும் சொர்க்கவாசி நான் என ஆன்மிக சிந்தனையை அள்ளித்தெளிக்கும் அந்த கவிதை, மனித தோல் பதினைந்து கஜத்தில் ஏழு ஜோடி செருப்புகள் தைத்தால் அவை அத்தனையும் எனை சொர்க்கம் சேர்க்கும். காணா இன்பம் தொடர்ந்து காண்போம். கண்ணை பிறரும் காண கொடுத்தால், காற்றடைத்தவிப் பையின் இடத்தில் இன்னொரு உயிரை வாழவிட்டால்…. ஆணாய் பிறந்த சோகம் போக்கி தாயாய் மாறத் தேர்ந்து விடலாம் என அற்புதமாக முடிகிறது.
மேலும், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று வாழ்வைத் தொடர லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். நம்மவர் வழியில் நாமும் உடல் உறுப்புகளைத் தானம் செய்வோம். உயிர்களைக் காப்போம் என மக்கள் நீதி மய்யம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




