நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த ஜூன் 27ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கணவரது இறப்பால் துக்கத்தில் இருந்து மீனா, தற்போது மெல்ல,மெல்ல அதில் இருந்து மீண்டு வருகிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். இந்த நிலையில் நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீனா கூறியிருப்பதாவது: என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்புதானம் செய்வதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துவிட்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.




