த்ரிஷியம் படத்தின் 3ம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிபடுத்தியுள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் த்ரிஷியம். 2013ல் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. ₹5 கோடி செலவில் உருவான இப்படம் ₹75 கோடி வசூல் சாதனையை படைத்தது.இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்திருந்தனர். மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளில் ரீமேக் ஆனது. இதுவும் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் த்ரிஷியம் 3 பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை உறுதி செய்யும் விதமாக த்ரிஷியம் படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் இதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மோகன்லாலின் ரசிகர்கள் த்ரிஷியம் 3 ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.




