நடிகர் ஜெயராமின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு,சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியானது.
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் (ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா) கமல்ஹாசன், ரஜினிகாந்த் பங்கேற்றனர். மேலும், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் லைக்கு பட்டனை தெறிக்கவிட்டு வருகின்றனர்.