அல்லு அர்ஜூன் நடிப்பில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து தெலுங்கில் உருவாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கடந்த மாதம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை சாய்ப்பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளதாகவும், அவர் பழங்குடி பெண்ணாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.