வெற்றிமாறன் இயக்கும் படத்தின் பாடலுடன் தனது புதிய ஸ்டூடியோவை தொடங்கி இருக்கிறார் இளையராஜா.
பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசையமைத்து வந்தார் இளையராஜா. அண்மையில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை வெளியேறும்படி நிர்வாகத்தினர் கூறி வந்தனர். இந்த நிலையில் தனக்கென சொந்தமாக ஸ்டூடியோ அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளையராஜா கோடம்பாக்கத்தில் இருந்த எம்.எம் திரையரங்கத்தை வாங்கினார். அங்கு பணிகள் முடிந்து இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டது. முதல் நாளில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சூரி நடிக்கும் படத்திற்கான பாடலுக்கு இசையமைத்தார்.

பின்னர் பேசிய இளையராஜா, ஜெமினி ,நெப்டியூன் விஜயா கார்டன் என ஸ்டூடியோக்கள் என காணாமல் போகின்ற வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் காணமல் போகவேண்டுமென்று நான் அங்கிருந்து வந்துவிட்டேன்.. என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் இதனை வாங்கி துவங்கியுள்ளேன் இன்றைக்குள்ள நவீனத்துவமான அனைத்தும் இங்குள்ளன. வாழ்கையில் எவ்வளவோ கடந்துள்ளோம் அது போல தான்.. எல்லாம் சவால் தான் முன்னேறுபவனை தடுக்க இடையூறுகள் வரும் நாம் அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். சென்றுக்கொண்டிருக்கும் போது மழை வருகிறது காகம் எச்சில் செய்கிறது அதையெல்லாம் நடப்பது போல தான் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார்.




