விஜய் தற்போது அவரின் ரசிகர் மன்றத்தை சந்தித்தனின் பின்னணி என்ன. சூர்யா அவர்களை பார்த்து சுதாரித்து கொண்டாரா?

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தைரியமாக அறிக்கை விட்ட நடிகர் என்றால் அது சூர்யா மட்டுமே. ஏதோ நாமும் கண்டித்தோம் என்று இல்லாமல் டபுள் ஸ்ட்ராங்காகவே தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இதனால் கடுப்பான பாஜகவின் பலரும் சூர்யாவை நேரடியாகவே சாடினர். அதேபோல் அவருடைய சூரரைப் போற்று படத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மண் உருண்டை பாடலில் சாதி பிரச்சனையை எழுப்பும் படியான வரிகள் இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தனர். மற்றொரு புறம் நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாகவும் சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இரண்டு வழக்குகளுமே பாஜக எதிர்பார்த்த திசையில் பயணிக்காமல் சப்பென முடிந்துவிட்டது.
அப்பாடா சூர்யா தப்பிச்சிட்டார் என எல்லாரும் சந்தோஷமாக இருந்தால், சூரரைப் போற்று படத்திற்கு தடையில்லா சான்றிதழ் தர முடியாது என இழுத்தடித்தது மத்திய விமானப்படை. இதனால் நொந்து போன சூர்யா எங்கேங்கே காய் நகர்த்தி ஒரு வழியாக தடையில்லா சான்றிதழை வாங்கிவிட்டார். ஆனால் அமேசான் பிரைமிலிருந்து திரையிடல் தேதி நீக்கப்பட்டதால் வேறு தேதி குறித்து ஆலோசித்து வருகின்றனர். சூர்யா மீது ஆளுங்கட்சிக்கு இவ்வளவு கடுப்பு வர காரணம் நீட் தேர்வு அறிக்கை மட்டும் கிடையாது, அதன் பின்னர் அவரை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் ஓட்டிய போஸ்டரும் தானாம்.
இதேபோல் தான் தளபதி விஜய்க்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளைய முதல்வரே என போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. குறிப்பாக மதுரை ரசிகர்களின் அக்கப்போரு அளவு கடந்து போய்க்கொண்டிருக்கிறது. மாஸ்டர் ஷூட்டிங்கின் போதே ரெய்டு, போராட்டம் என தொல்லை கொடுத்தவர்கள், இப்படி எல்லாம் போஸ்டர் ஒட்டினால் சும்மாவிடுவார்களா என்ன?. மாஸ்டர் பட ரிலீஸில் ஆரம்பித்து, ரெய்டில் சிக்கிய கணக்கில் வராத சொத்து விபரங்கள் வரை அனைத்தையும் வைத்து விஜய்யை பந்தாடுவார்கள்.
போதாதக்குறைக்கு விஜய் அப்பா வேறு பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு படு காரசாரமாக பதில் சொல்லியுள்ளார். இதனால் மத்தியிலும், மாநிலத்திலு ம் விஜய் விரோதத்தை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் ரசிகர்களை அடக்குவோ என முடிவெடுத்த விஜய், தேவையில்லாமல் போஸ்டர்கள் ஒட்டும் வேலைகளை உடனடியாக நிறுத்துங்கள் என உத்தரவிட்டுள்ளாராம். ஆனால் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் வழக்கமாக செய்து வரும் சேவைகளை தொடருங்கள் என்றும், அதற்கான உதவிகள் சரியான நேரத்தில் தன்னிடம் இருந்து கிடைக்கும் என்றும் வாக்குறுதி கொடுத்து அனுப்பியுள்ளார். விஜய்க்கு அரசியல் ஆசை இல்லாமல் இல்லை இருந்தாலும் தற்போதைய சூழ்நிலை எதையும் அலசி ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.




