கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான ஒரு இயக்குனர் தான் நாக் அஸ்வின் இவர் புதிதாக டைரக்டு செய்ய இருக்கும் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனும் இணைய உள்ளார். இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ”நடிகர் கமல்ஹாசன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். கமல்ஹாசன் வருகையால் இந்த படம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பின் நாட்டம் மொழிகளை கடந்து அனைத்துவகை பார்வையாளர்களையும் மகிழ்வித்துள்ளது. 20 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க கால் ஷீட் கொடுத்திருக்கும் கமல்ஹாசன் ரூ.150கோடியை தனது சம்பளமாக பெற இருக்கிறார்.இந்திய அளவில் பல்பிரபல கலைஞர்கள் இணைந்து கலக்கப்போகும் புராஜெக்ட் கே திரைப்படம் அறிவியல், தொழில்நுட்பம், ஆக்–ஷன் மற்றும் திரில்லர் கதைக்களைத்தை மையமாக கொண்டு உருவாக திட்டம் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.