முன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.
மிஷ்கின் அவர்களை அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அவர் அஞ்சாதே, பிசாசு, சைக்கோ போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். அதுமட்டுமின்றி இவர் அதற்கான வெகுமதியையும் தமிழ் சினிமா ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்று இருக்கின்றார். இவரின் அடுத்த படம் என்னவென்று அனைவரும் யூகித்து வந்த நிலையில் இவரின் பிசாசு 2 போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக கார்த்திக் ராஜா இணைத்துள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதை பற்றி இவர் கூறுகையில் பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன்.
தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் எனவும் அவர் கூறினார்.