‘கே.ஜி.எஃப்- சாப்டர்2’ படத்தின் டீசர் யஷ் பிறந்தாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் 2018ல் வெளியாகி ஹிட் ஆன படம் ‘கேஜிஎஃப்- சாப்டர்1’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், இந்த வருடம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனா, கொரோனா சூழல் காரணமாக அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. கடந்த மாதம் இதில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது படக்குழு.
READ MORE- பொங்கலுக்கு வெளியாகும் ‘சூரரைப்போற்று’?
அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு திட்டமிட்டு 24 நாட்கள் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. இந்த நிலையில்தான் கொரோனா சூழல் வந்தது. தற்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு படப்பிடிப்பு தொடங்கி, நேற்று இரவு சாப்டர்2-வின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று யஷ் பிறந்தநாளுக்காக வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றே படத்தின் டீசர் கசிந்து விட படக்குழு நேற்று இரவே இதை வெளியிட வேண்டிய சூழலில் இருந்திருக்கிறது.