பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதால் அதை எடுப்பதற்கு திரைத்துறையினர் முழு முனைப்பு காட்டி வருகின்றனர்.
தோனி அன்டோல்ட் ஸ்டோரி வெற்றிக்குப்பிறகு, நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாகக்கொண்டு வந்த நடிகையர் திலகம் படம் தென் இந்தியாவில் மாபெரும் வெற்றியைப்பெற்றது இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது, பிறகு தான் வாழ்க்கை வரலாறு எடுக்கும் திரைப்படங்கள் எடுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அந்த வகையில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு, NTR ன் வாழ்க்கை வரலாறு, மற்றும் அவரின் இறுதி காலத்தில் மனைவியாக இருந்த லட்சுமியின் வாழ்க்கை வரலாறு போன்ற கதை அம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அந்த வகை படங்கள் எடுக்கப்படுகின்றன.
மேலும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகி வருகிறது இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். மாயாவதி வாழ்க்கை படத்தில் ரிச்சா சட்டா, பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் மாதவன், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை கதையில் ஸ்ரத்தா கபூர், கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது. இவர் 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெண்கல பதக்கம் வென்றார்.
பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆவார். இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. ரகுல்பிரீத் சிங் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.