பிரபல சின்னத்திரை நடிகை மால்வி மல்ஹோத்ராவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகை மால்வி மல்ஹோத்ரா.
இவர் பிரசித்தி பெற்ற கஃபேவுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு 9 மணியளவில் செவ்சோவா என்ற பகுதியில் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் வழிமறித்து, தன்னைத் தயாரிப்பாளர் என்று நடிகை மால்வி மல்ஹோத்ராவிடம் கூறித் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு நடிகை மல்ஹோத்ரா மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் மஹிபால் சிங்,தன்னிடம் இருந்த கத்தியால் நடிகையின் வயிற்றிலு, கையிலும் குத்திவிட்டு ஓடிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துவிட்ட மால்வி மல்ஹோத்ராவை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் நடிகை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தக் கொடூரக் கொலை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டங்கள் குவிந்து வருகிறது.இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட யோகேஷ் மஹிபால் சிங் மீது போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.