“களத்தில் சந்திப்போம்” பட வெற்றியால் குஷியில் இருக்கிறார் மஞ்சிமா மோகன். அதில் நடிப்பு பேசப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். தற்போது அவர் நடித்து வெளியான “களத்தில் சந்திப்போம்” படத்தில் மஞ்சிமா மோகனின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனால் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார் மஞ்சிமா. படம் பற்றி பேசிய அவர், என்னிடம் களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாப்பத்திரம் நன்றாக வருமென்கிற நம்பிக்கை இருந்தது. தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்நேரத்தில் என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் RB.சௌத்திரி சார் அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும், இயக்குநர் N. ராஜசேகர் அவர்களுக்கும் பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் நடித்த சக நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மஞ்சிமா மோகன் தற்போது Zam Zam (Queen படத்தின் அதிகாரப்பூர்வ மலையாள ரீமேக்), விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப் ஐ ஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.