‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஏன் வசனம் பேசவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா என பலரும் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. பல கட்ட தடைகளை தாண்டி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான ‘மாஸ்டர்’ டீசரில் விஜய்க்கு ஏன் வசனம் பேசவில்லை என கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு லோகேஷ் பதிலளித்துள்ளார்.
READ MORE- ‘மாஸ்டர்’ பொங்கல். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
’பொதுவாக விஜய்யின் படங்களுக்கான டீசரில் இறுதியில் பன்ச் இருக்கும். ஆனா, இந்த படத்தில் அவருக்கு என தனிப்பட்ட பன்ச் வசனங்கள் எதுவும் இல்லை. அதனால் டீசரில் அவர் வசனங்கள் இடம் பெறாமால் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
அதேபோல, டீசரை ஹாலிவுட் படத்துடன் ஒப்பிட்டு நிறைய குறியீடுகள் எல்லாம் சொல்கிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. இது 50% என் படமாகவும், 50% விஜய் சார் படமாகவும் வந்துள்ளது’ என லோகேஷ் பதிலளித்துள்ளார்.மேலும் படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.