‘மாஸ்டர்’ பட்த்தின் முதல் நாள் வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து பொங்கலுக்கு வெளியாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.
ரசிகர்களின் பல கட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு பிறகு படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. கொரோனா காலம் என்பதால், தியேட்டர்களில் 50 சதவீத ஒதுக்கீடோடு படம் திரையிடப்பட்டது. படம் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமாக ஒன்றாக இருக்கும் என படம் குறித்து பல தரப்பிலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
READ MORE- பிரபலங்களின் பொங்கல் வாழ்த்துகள்! #HappyPongal
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்தான தகவலை வெளியாகியுள்ளது. 50% இட ஒதுக்கீட்டிலும் ‘மாஸ்டர்’ 27 கோடி வசூல் செய்து ‘பிகில்’, ‘சர்க்கார்’, ‘மெர்சல்’ படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.