‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி என பலரும் நடித்து கொரோனா காலத்துக்கு பின்பு ஒரு வருடம் கழித்து தியேட்டரில் வெளியான படம் ‘மாஸ்டர்’.
ரசிகர்கள் பலரின் எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்புகளோடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான வசூலோடு சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் கொரோனா சூழலை கடந்தும் தியேட்டர்களில் நல்ல வசூல் வந்தது.
இதனை அடுத்து படம் பார்க்காத பலரும் ஓடிடி மற்றும் தியேட்டரில் எப்போது படம் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
READ MORE- செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடிய டொவினோ! #PhotoAlbum
அந்த வகையில், தற்போது அமேசானில் அடுத்த மாதம் 14ம் தேதியும், சன் டிவியில் ஏப்ரல் 14 அதாவது தமிழ் புத்தாண்டு அன்றும் ஒளிபரப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.