‘மாஸ்டர்’ படம் இன்னும் இரண்டு நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் என தகவல் வருகிறது.
‘மாஸ்டர்’ இன்னும் இரண்டு நாட்களில் (ஜனவரி 29) ஓடிடியில் வெளியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாதம் பொங்கலுக்கு படம் வெளியான நிலையில் வெளியாகி மூன்று வாரங்களுக்குள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ‘மாஸ்டர்’ரின் இந்த சீக்கிரமான ஓடிடி வருகை ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் அதே சமயம் ஏன் இவ்வளவு சீக்கிரம் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
ஏனெனில் ‘மாஸ்டர்’ இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் 50% இடஒதுக்கீடுகளிலேயே உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
READ MORE- வைரலாகும் குட்டி ‘தல’ புகைப்படங்கள்! #PhotoAlbum
இதனால், ஏன் இவ்வளவு சீக்கிரம் என்ற கேள்விக்கு மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் லாக்டவுனால் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும் இங்கு இந்தியாவில் கொரோன சூழலால் இன்னும் தியேட்டர்களில் படம் பார்க்காத ஃபேமிலி ஆடியன்ஸ்ஸூடைய வேண்டுகோளின் பேரிலும் படம் இவ்வளவு சீக்கிரம் ஓடிடிக்கு வர முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.