மலையாள நடிகர் பிரித்விராஜ் இவர் தமிழிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார் இவர் சமீபத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தை பார்த்துள்ளார் அதில் கமலின்நடிப்பில் வியந்து அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் ப்ரித்விராஜ் மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவர். தமிழில் நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன்,கனா கண்டேன்,மொழி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் நடிகராக மட்டுமின்றி ப்ரொடியூசர் ஆகவும் வளம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது அது தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது .
தற்போது நிலவும் சூழ்நிலையில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால், ப்ரித்விராஜ் அவரின் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். இதில் உடற்பயிற்சிகள் செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டும் இருக்கிறார்.
இதனிடையே பல வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்த திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. இதில்கமல்ஹாசனின் மொத்தம்நான்கு வேடங்கள் இந்த வேடங்கள் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே ஏற்கனவே பாராட்டி ஒன்றுதான். தற்போது பிரித்திவிராஜ் க்கு இந்த படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைப் பார்த்ததும் அவர் இன்ஸ்டாகிராம் பதிந்துள்ள விவரம் பின்வருமாறு
மிகவும் அரிதான படங்களை உங்களை முழுவதுமாக மகிழ்விக்கும் அப்படி ஒரு படமாக மைக்கேல் மதன காமராஜன் இருந்தது. கமலஹாசன் உலக சினிமாவின் அரிய நடிகர்களில் ஒருவர். மற்றும் சகோதரி ஊர்வசி அவர்கள் இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும்பாத்திரத்தின் ஆளுமை மிகவும் சிறப்பாக உள்ளது.
இதுபோன்ற ஆல்டைம் கிளாசிக் படத்தை எனது மனைவியுடன் இணைந்து பின்னிரவில் மீண்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்று பிரித்திவிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.