தனது படம் குறித்து யாராவது ரியாக்ட் செய்தால் வருந்துவேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தின் போது காதல் உருவானதாக வெளியான தகவல் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் எங்குச் சென்றாலும் அது பிரபல ஊடங்களில் கவனம் பெறும்.
இவ்விருவரின் ரசிகர்களும் இவர்களைக் குறித்த செய்திகளை வைரலாக்குவார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன் தாரா இருவரும் எப்போது காதல் செய்வார்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்திகள் பரவியது. சமீபத்தி இந்த ஜோடி தனி விமானத்தில் கேரளா சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினர். அதன் பின் கோவா சென்றனர். இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தான் தந்தையும் சென்னை அலங்கார் தியேட்டைல் பார்த்த முதல் படம் டிராகன். எனது தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் அவருக்கு ஆங்கிலப் படங்களே பிடிக்கும் . அம்மாவுக்கு தமிழ்ப் படங்கள் பிடிக்கும் இருவரும் சேர்ந்து ரஜினியின் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம்.
நான் என் குடும்பத்துடன் பார்த்த படங்களை விட என் படங்களை ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் வேறாக இருந்தது. என் படங்களான தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், போன்ற படங்களை தியேட்டரில் பார்த்துள்ளேன்..அப்போது எனது குறிப்பிட்ட காட்சிக்கு ரசிகர்கள் முகபாவனை வேறு மாதிரி இருந்தால் வருத்தமாக இருக்கும்….அதனால் திரையரங்கில் அமர்ந்து பார்ப்பதைத் தற்போது தவிர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.