நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மோசடி கும்பலால் ஏமாற்ற பட்டுள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா, அதே போல் பல முன்னணி நடிகர்கள் இவரின் கால்ஷிட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். ஒரு படத்திற்கு பலகோடி வரை சம்பளம் வாங்குகிறவர் நயன்தாரா. தமிழில் 3 கோடி வரையிலும் தெலுங்கில் 4 கோடி வரையிலும் சம்பளம் வாங்குகிறார். அவரது சம்பளத்தை அசைய சொத்துக்கள் வாங்கி முதலீடு செய்கிறார்.
நயன்தாரா போல் நடிகை ரம்யா கிருஷ்ணனும் அசைய சொத்துக்கள் மீது முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரி புறம்போக்கை ஒரு சதி கும்பல் ஏமாற்றி விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் வாங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்துள்ள மோதலால் இந்த சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏரி நிலத்தில் வீடு கட்ட அனுமதி இல்லை.முறைகேடாக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து வாங்கி அதனை ஒரு கோடிக்கு விற்று தனது பார்ட்னர் மோசடி செய்து விட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுதிர் ரெட்டி கூறியுள்ளார். இதனால் நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மோசடி கும்பலால் ஏமாற்ற பட்டுள்ளனர் அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைப்பற்றி இன்னும் தகவல் கிடைக்கவில்லை.