மறைந்த பாடகர் எஸ்.பி.பி. மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருடந்தோறும் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு தலைவர் இதை வழங்குவார்.
அந்த வகையில் இந்த வருடம் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலை, சமூகப்பணி, அறிவியல், பொது விவகாரங்கள், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி, வர்த்தகம், பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
READ MORE- சிநேகா மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
இதில் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷனும், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு இலக்கியம், கல்வி மற்றும் பத்திரிக்கை துறையில் பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.