பெட்ரோல் விலை உயர்வு குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 85. 01 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துவருவதற்கு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பெட்ரோல் விலை உயர்வுக்கு பயன்படுத்தியதை பார்த்த வைரமுத்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :
‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’
#PetrolDieselPriceHike என தெரிவித்துள்ளார்.
அந்த பாடலை தற்போது எழுதச் சொல்லியிருந்தால் நீங்களே இப்படித் தான் எழுதியிருப்பீர்கள். போராட்டமோ, கண்டனமோ தெரிவிக்காமல் இப்படி கேலி, கிண்டல் செய்தால் பெட்ரோல் விலை குறையதாது கவிஞரே. மேலும் போராடினால் தேச துரோக வழக்குப்பதிவு செய்துவிடுகிறார்கள். ‘பசி எடுத்தால் சொல்லி அனுப்பு; கேஸ் இருந்தால் சமைக்கிறேன்’… நாங்களும் எழுதுவோம்ல.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.