நடிகர் ஷாம் உட்பட 13 பேரை, சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்
தமிழில், விஜய் நடித்த ‘குஷி’ படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஷாம்.
பின்னர் 12பி , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்க்கை, உள்ளம் கேட்குமே, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார்.இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது என்று கூறப்படுகிறது.
நேற்று நடந்த போலீஸ் ரெய்டில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்யப்பட்டார்கள் பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது