பொன்னியின் செல்வன் இந்த படத்தை எம்.ஜி. ஆர் காலத்தில் இருந்து எடுக்க முயற்சி செய்தனர் அதீத பொருட்செலவு, நாட்கள் விரயம், நட்சத்திரங்களின் கால்ஷிட் பிரச்னை போன்ற விசயங்களினால் இந்த பிரமாண்ட படைப்பில் இருந்து பின்வாங்கினர்.
ஆனால் அதை இப்போது செய்து கொண்டு இருப்பவர் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னம், அவருக்கும் இது ஒரு மிகப்பெரும் படைப்பு கல்கி எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப்படத்தில், படப்பிடிப்பு கடத்த ஆண்டு தொடங்கி 40 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும், சென்னையிலேயே மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
பல நடிகர்கள் இப்படத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர் அந்த வகையில் தெய்வ திருமகள், சைவம் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரமாக நடித்த சாரா இணைத்துள்ளார், அவர் இணைந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.