மலையாள இறக்குமதியான பார்வதி தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைத்துறையினர் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அவ்வப்போது அது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் தற்போது பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்குத்தி குத்திக்கொள்ளும் வைபவத்தை தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாக பார்வதி பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள பார்வதி, “உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்குத்தி குத்திக்கொண்டேன் என்றும் மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி” என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார்.இது ட்ரெண்ட் ஆகி வருகிறது.