கடந்த 2019ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக, செய்தி பரவி வருகிறது.
தமிழில், தளபதி விஜய் ஜோடியாக அறிமுகமாகி இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் அமெரிக்காவில் நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்தார்.
ஆறு மாத காதலுக்குப் பின் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவின் ஜோத்பூரில் கடந்த டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந் தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் , தொழில் அதிபர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்திற்கு பின்னர் தனது பெயருடன் கணவர் குடும்ப பெயரை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது பெயருடன் இணைக்கப்பட்டு இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என செய்திகள் கிளம்பியுள்ளன.
இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என பிரியங்கா சோப்ராவின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.