திரைப்படம், நாடகம், விளையாட்டுப்போட்டி என அனைத்திலுமே முதலில் ஒரு பாகம் வந்துவிட்டால் அடுத்து வரும் பாகங்களை முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பார்த்து கருத்துக்கள் சொல்வது நம் மனநிலை, இதில் மட்டுமல்ல நடிகர் நடிகைகளின் வாரிசுகள், அரசியல் வாரிசுகள் என அவர்களையும் ஒப்பிட்டு அப்பாவை போல் ஸ்டைல் இல்லை அம்மாவை போல் அழகு இல்லை தாத்தாவை போல் பேச்சு இல்லை என கருத்துகளை அவர்கள் மேல் தெளிப்பது புதிதல்ல… இதில் நம் பிக் பாஸ் க்கு மட்டும் என்ன விதிவிலக்கா?
பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஆரம்பமானது.மும்தாஜ், பொன்னம்பலம் என பெரிய நட்சத்திரங்கள் தொடங்கி யாஷிகா, ஐஷ்வர்யா, ஜனனி, ரித்விகா, டேனி, மஹத், ஷாரிக் என இளமை பட்டாலங்களும் இணைந்தன, சென்றாயனும் தாடி பாலாஜியும் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன? முதல் நாள் நிகழ்ச்சியில் ஓவியாவை பார்த்தும் அத்தனை பேரும் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர், ஓவியா விருந்தாளியாக வந்திருக்காரா இல்லை போட்டியாளராக வந்திருக்காறா என தெரியாமல் நீண்ட நேர குழப்பம் இருந்தது.
ஆனால் பிக் பாஸ் முதல் சீசனை போல் இரண்டாம் சீசன் அந்த அளவுக்கு மனதில் ஒட்டாமல் சென்று கொண்டிருந்தது. தாடி பாலாஜி அவர் மனைவி நித்யா ஒரு புறம் , மஹாத், யாஷிக்கா, ஐஷ்வர்யா, டேனி கூட்டம் ஒரு புறம் என சலிப்பு தட்டும் விதமாகவே இருந்தது.
பிக்பாஸ் சலிப்பு தட்டி போக விடுவாரா நம்ம தலைவர், வழக்கம் போல ஒரு டாஸ்க் கொடுத்து கொளுத்தி போட்டார். ஏற்கனவே வீட்டில் சலசலப்பு இருந்த நேரத்தில் ஐஸ் கையில் வந்தது ராணி மகா ராணி, கண் முன்னே ஒரு சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்தார் ஐஷ்வர்யா துத்தா, சென்றாயன் காபியை வாங்கி கொட்டியது, தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டியது என TRP rate எகிறியது.
இத்தனைக்கும் மேலாக நம்மவர் கோட்டை கழட்டி எரிந்து சட்டைக் கையை மடித்து விட்டதும் விருமாண்டி பட பாடல் பின்னால் இசைக்க பட்டதும் இன்றும் புல்லரிக்கும் தருணம்.ஐஸ் இருந்தால் மட்டுமே இனி பிக்பாஸ் என்னும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் வாரம் ஒரு காரணம் சொல்லி அவர் வீட்டின் உள்ளே வைக்க பட்டார்.பூனைக்கு மணி கட்டுவது போல் வந்து சேர்ந்தார் வைல்டு கார்டு வரவு விஜயலட்சுமி கொளுத்தி போட்டிருந்த பிக் பாஸ் வீடு மேலும் சூடு பிடித்தது. அது வரை பேசாத ஜனனி, ரித்விகா கேள்வி கேக்க ஆரம்பித்தார்கள். விஜியின் பல கேள்விகளுக்கு ஐஸிடம் அமைதி தான் பதிலாக இருந்தது.
பொறுமையாக இருந்து, விவேகமாக செயல் பட்ட ரித்விகா பிக் பாஸ் சீசன் 2 வின் வின்னர் ஆனார்.பிக் பாஸ் யாஷிக்க ஆனந்தை யாராலும் மறக்க முடியாது, 19 வயது பெண்ணுக்குள் முதிர்ச்சியான பக்குவமா என வியக்க வைத்தார், நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு அவரின் நட்பதிகாரம், மகத் உடனான காதல், எளிதாக அந்த ஏமாற்றத்தில் இருந்து தன்னை வெளிக்கொண்டு வந்த விதம் என அத்தனையும் வியக்க வைத்த விஷயம்.இதுவரை பார்த்திராத எத்தனையோ விஷயங்கள் சீசன் இரண்டில் இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் சீசன் 1 மற்றும் 3 போல் சீசன் 2 நம் மனதோடு ஒட்டவில்லை.