தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனுராமசாமி. இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனுராமசாமி. இவர் கூடல் நகர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுறை போன்ற தரமான மண்வாசனையுள்ள படங்களை இயக்கியுள்ளார்.
இவர் அடுத்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மாமனிதன் என்ற படத்தையும் அவர் இயக்கிவருகிறார்.
இந்நிலையில், இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். தமிழக முதல்வர் தனக்கு உதவ வேண்டுமென டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் முத்தையா முரளிதரளின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.




