நடிகை ஷகிலாவின் பயோபிக்காக உருவாகி இருக்கும் இதன் ட்ரைய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படமாக ‘ஷகிலா’ உருவாகி இருக்கிறது. இந்தியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஷகிலாவாக ரிச்சா சத்தா நடித்துள்ளார். மேலும் ராஜீவ் பிள்ளை, பங்கஜ் திரிபாதி, கஜோல் சக் என பலரும் நடித்துள்ள இந்த படத்தை இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார்.
READ MORE- #Thalapathy65 ஷூட் மற்றும் ரிலீஸ் அப்டேட்!
இந்த படம் ஷகிலாவின் வாழ்க்கையையும் அவர் திரைத்துறைக்குள் நடிக்க நேர்ந்த படங்களையும் இதனால் அவரது குடும்பமே அவரை புறக்கணித்தது பின்பு இவரது படத்தை வெளியிட கூடாது என திரையுலகமே தடை கேட்டது உட்பட பல விஷயங்களை இந்த படம் பதிவு செய்துள்ளது.
பெங்களூருவில் படமாக்கப்பட்ட இது இந்த மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.