பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவுக்கு பாடகி ஜானகி விவரிக்க முடியாத துயரம் என்று கூறியிருக்கிறார்.
எஸ்.பி.பி. அவர்களின் மரணம் இன்று உலகையே உலுக்கி எடுத்துள்ளது. அவரின் பிரிவை தாங்க முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவருடன் பல வருடமாக பணிபுரிந்த ஜானகி அம்மா அவர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மா கூறியது யாதெனில் ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகாராக உயர்ந்தார்.
1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான் நடுவராக கலந்த கொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார். அவரது மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.