சோனு சூட் சிலையுடன் இதுவரை1 0 லட்சம் பெர் செல்ஃபி எடுத்து தங்களின் பிரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியாவில் 85 லட்சம் மக்களைத் தாக்கியுள்ளது.
இந்த நோய் வந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் மார்ச் மாதம் 24 முதல் முதல் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அனைத்து தொழில்துறையினரும், மக்களும் பெருவாரியாகப் பாதிகப்பட்டனர்.
அவர்களின் வாழ்வாதரமும் பெருமளவில் பாதிகப்பட்டது.அப்போது நடிகர், நடிகைகள்,பிரபலங்கள் அரசுடன் இணைந்து உதவி செய்தனர்.
இதில் இந்தியா முழுவதும் கவனம்பெற்றவர் சோனுசூட், இவர் வெளிநாட்டுகளில் உள்ள மக்களும், மாணவர்களும் இந்தியா திரும்புவதற்கு தனி விமானம் ஆயத்தப்படுத்தினார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தனி ரயில் விமான செலவுகளை ஏற்றுக்கொண்டார். அத்துடன் மாணவர்களின் படிப்பு, வேலைவாய்ப்புக்கு பல லட்சம் உதவினார்.
இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சமீபத்தில் விருது வழங்கியது.
இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா கால ஊரடங்களில் செய்த உதவிகளைப் பாராட்டி கொல்கத்தாவைச் சேர்ந்த துர்கா பூஜைக் குழுவினர் சிலை வடிவமைத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடித்து, பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்தாலும் ஆபத்துக் காலத்தில் உதவி மக்களின் மனதில் ஹீரோவாக இருக்கும் சோனு சூட்டின் நவராத்திரி பூஜைக்கான வைக்கபட்டுள்ள சிலையுடன் இதுவரை 1 மில்லியன்( 10 லட்சம் )மக்கள் செல்ஃபி எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.