நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தில் ஐந்து நிமிட வீடியோ ஏற்கனவே இணையதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் BGM-ஐ வெளியிட்டுள்ளார் சில நொடிகள் ஓடும் இந்த பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவைப் பாராட்டி ஹை எனர்ஜியாக உள்ளதாக சூர்யா, இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்-ஐப் பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் ரிலீஸான தனது சைலன்ஸ் படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது ஒரு ரசிகர் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்து வீட்டீர்களா படம் எப்படி இருக்கிறது?’ என கேட்க அதற்கு மாதவன் ஒற்றைவரியில் ‘mindblowing’ எனக் கூறியுள்ளார்.




