தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயனும் இணைய உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனாவுக்குப் பின் வெளியான பெரிய படம் என்பதால், உலக அளவில் கவனம் ஈர்த்தது.
இதனையடுத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தற்காலிகமாக தளபதி 65 எனக் குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயனும் இணைய உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ என நெல்சன் இயக்கும் படங்களில் பாடல்களை எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தளபதி 65 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.