சமந்தா விவாகரத்திற்கு காரணம் இதுதான் என ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து!!
எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் மனமொத்து விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே மற்றும் இருவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று செய்திகள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், நடிகை சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறுகையில், “பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட குடும்பத்தில் பிரச்சனை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.