வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் சேஸிங், தாய்ப்பாசம் என மசாலா திரைப்படத்திற்கு தேவையான அனைத்தும் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை காலா திரைப்பட புகழ் ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை குழுவினர் சார்பாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் வலிமை டீசர் குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கோலிவுட் வட்டாரத்தினர் தெரிவித்துள்ள தகவலின் படி, வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தல தரிசனத்திற்காக உற்சாகம் அடைந்துள்ளனர்.




