சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டை தரப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் தமிழில் வெளியாக இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரது படங்களையும் சன்பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது.
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு விஜய்யின் 65வது படம், நடிகர் சூர்யாவின் 40வது படம், ரஜினியின் அரசியல் பிரேவசத்திற்கு முன்பே வெளியாகும் என கணிக்கப்படும் ‘அண்ணாத்த’, தனுஷ், அனிருத் இணையும் தனுஷின் 44வது படம் என அடுத்த வருடம் எதிர்ப்பார்க்கப்படும் பல முக்கிய படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அந்த வகையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக ‘மெகா அனெளன்ஸ்மெண்ட்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அது எப்போது எது குறித்து என எந்த தகவலும் வெளியாகவில்லை. ‘அண்ணாத்த’ பட பிடிப்பு சீக்கிரம் முடித்து விடும் நோக்கத்தில் இருப்பதால், அது குறித்தும் இருக்கலாம்.
READ ALSO- #Thalapathy65 அறிவிப்பு எப்போது?
ஏனென்றால் நாளை மறுநாள் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் எனவே அது முன்னிட்டும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள். தளபதியின் 65வது படம் பற்றிதான் எனவும், சூர்யாவின் 40வது படம் குறித்துதான் எனவும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.