தமிழில் கதாநாயகியாக நடிக்கும் சன்னி லியோன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டப் படலர் நடிக்கிறார்கள். சென்னை, பெரம்பலூர், மும்பை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. சக்தி, சசிகுமார் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கடந்த 2009 ஆண்டு வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்தார், அப்படத்தின் இயக்குநர் யுவன். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து இப்போதுவரை தமிழகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ‘கதர்னாக்’, ’ரணம்’ உள்ளிட்டப் படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய யுவன் மீண்டும் தமிழில் ஹாரர் -காமெடி கலந்த படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, தமிழில் ஜெய்யுடன் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோனி நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.