சூர்யாவை பிரபல நடிகை ஒருவர் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ரசிகர்கள் கொலைவெறியில் உள்ளனர். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
தமிழ் திரையுலகில் விஜய், அஜித்திற்கு அடுத்த படியாக உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா தன் படத்திற்காக தன்னை வருத்திக்கொண்டு அந்த கதா பாத்திரமாகவே மாறிவிடுவார் உடல் எடை கூட்டுவது குறைப்பது போன்ற அனைத்தையும் செய்து அந்த கதாபாத்திரத்திற்க்கு வடிவம் கொடுப்பவர் நடிகர் சூர்யா எடுத்துக்காட்டாக வாரணம் ஆயிரம் படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர் போல் தோற்றம் அளித்திருப்பார்.
அதே போல் “காக்க காக்க”படத்தில் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருப்பார் அப்படிப்பட்ட சூர்யாவை பிரபல நடிகை ஒருவர் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ரசிகர்கள் கொலைவெறியில் உள்ளனர். இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
சமீபகாலமாக திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளை நேரடியாக அவர்களின் பெயரை குறிப்பிட்டு வம்பிழுத்து வருகிறார் மீரா மிதுன். அந்த வகையில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்துவந்தார் அதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையைப் பற்றி தவறாக பேசியுள்ளார். இருவரும்தான் தமிழ் சினிமாவின் பெரிய மாபியாக்கள் என புதிய வதந்தி பரப்பினார்.
இதன் காரணமாக ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மீராமிதுன் மீது ஆத்திரத்தில் இருந்தனர். சும்மா இருக்காமல் தற்போது சூர்யா ரசிகர்களை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் மீரா மிதுன்.மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சேர்ந்து நடித்தார் எடிட்டிங்கில் அவர் காட்சிகள் நீக்கப்பட்டது, அந்த கோவத்தில் சூர்யாவை வம்புக்கு இழுத்துள்ளார்.
இதனால் அவர் ரசிகர்கள் மீராவை கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.ஒருவனுக்கு எந்திரிக்கவே வக்கு இல்லயாம்!ஆனா ஒன்பது பொண்டாட்டியாம்? என கமெண்ட் செய்து வருகின்றனர்.