சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘தளபதி-65’ படத்தின் ஹீரோயின் மற்றும் வில்லன் அப்டேட் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி65’ குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ் திருமேனி, முருகதாஸ் என பல இயக்குநர்களது பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியில் ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இறுதி செய்யப்பட்டார். அதேபோல படத்திற்கு தமன் இசையமைக்க போகிறார் என முன்பே உறுதியானது.
ஆனால், இந்த கூட்டணி சாத்தியப்பட அனிருத்தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில் ‘தளபதி65’ இசையமைப்பாளராக அனிருத் இதில் உள்ளே வந்திருக்கிறார். தற்போது ‘மாஸ்டர்’ பொங்கல் ரிலீஸ்க்கு பிறகு ‘தளபதி-65’ படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச்சில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
READ MORE- விஜய்சேதுபதி படத்தில் இணையும் சந்தானம்!
பட ரிலீஸ் அடுத்த வருட தீபாவளிக்கு இருக்கும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள். மேலும் படத்தின் நாயகியாக ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, நிதி அகர்வா பெயர்கள் அடிபட விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போது சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு காத்திருப்போம்.