ட்விட்டரில் #MasterDisaster என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. மாஸ்டர் படம் மாஸ்டர் பிளாஸ்டர் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நான் தான் விஜய் ஹீரோயின் என்று பெருமையாக பேட்டி அளித்தாரே மாளவிகா, படத்தில் அவர் வெறும் டம்மி பீஸ் தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஆண்ட்ரியா இந்த படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள் மாஸ்டரை பார்த்தவர்கள். இந்நிலையில், #MasterDisaster என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. மாஸ்டரை அநியாயத்துக்கு கலாய்த்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
#MasterDisaster ஹேஷ்டேகுடன் வெளியாகியுள்ள ட்வீட்டுகளில் கூறப்பட்டிருப்பதாவது :
மாஸ்டர் படத்தை பார்த்த பிறகு அட்லி நக்கலாக சிரிப்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
மாஸ்டரை இந்த அளவுக்கு பங்கம் செய்யக் கூடாது.
மாஸ்டர் படம் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று பலரும் புகார் தெரிவித்துள்ளனர். முதல் பாதியே இழுக்கிறது, இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இப்படி ஒரு மீம்ஸ்.
விஜய் சட்டையை எல்லாம் கழற்றி தன் ஃபிட்டான உடம்பை காட்டி விஜய் சேதுபதியை பாட்டு பாடி துவைத்து எடுக்க அதை போய் இப்படி கிண்டல் செய்தால் என்ன செய்வது பாஸ்.
எங்க தலைவரின் ஸ்டைலை விஜய் காப்பியடிப்பது சரிதான் அப்படியே காப்பியடிப்பதை ஏற்க முடியாது என்று ரஜினி ரசிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர்.