நடிகர் விஜய்யின் 65வது படம் குறித்து தற்போது ஒரு தகவல் இணையத்தில் பரவி கொண்டிருக்கிறது.
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் 65வது படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வந்தது. கடந்த 2011ல் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்திலேயே இயக்குநராக நெல்சன் அறிமுகமாகி இருக்க வேண்டியது.
அந்த படத்தில் துப்பாக்கியோடு சிம்பு பேசுவது போல டீசர் எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் வெளியாகமல் போனது. தற்போது ‘தளபதி65’க்கான அறிவிப்பிலும் துப்பாக்கி பிண்ணனியோடு அறிவிப்பு வீடியோ இருந்தது.
READ MORE- சித்ராவுடன் நெருங்கிய நட்பு…விஜே ரக்ஷனின் விளக்கம் என்ன?
எனவே, சிம்புவின் ‘வேட்டைமன்னன்’ கதையில் மாற்றங்களோடு தளபதி இந்த படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.