சாமி’, ‘சாமி2’ படங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரமுடன் இயக்குநர் ஹரி இணைய இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா லாக்டவுண் சமயத்தில் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா ஆறாவது முறையாக இணையும் ‘அருவா’ படம் குறித்தான பேச்சுகள் பரவலாக இருந்தது.
ஆனால், லாக்டவுன் சமயத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது. மேலும் சூர்யா வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ்ஜின் புதிய படம் என பிஸியாக இருந்ததால் ‘அருவா’ படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றே செய்திகள் வர தொடங்கியது.
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், தற்போது ‘சாமி’, ‘சாமி2’ படங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரமுடன் இயக்குநர் ஹரி இணைய இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது எந்த அளவுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
அதற்கான புது கெட்டப்பில்தான் அருண் விஜய் மீசை வைத்திருந்தார் எனவும், படத்திற்கான டெஸ்ட் ஷூட் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.