’மாஸ்டர்’ வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலரும் நடித்த படம் ‘மாஸ்டர்’.
கொரோனா சூழலுக்கு பிறகு இந்த வருடம் பொங்கலுக்கு தியேட்டரில் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸிலும் 110 கோடிக்கு மேல் வசூல் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘மாஸ்டர்’ படம் இந்தியிலும் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
READ MORE- விஜய்சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
இதில் பவானி கேரக்டரில் விஜய்சேதுபதியே நடிப்பதாகவும் ‘மாஸ்டர்’ராக ரித்விக் ரோஷனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.




