தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து வெளியிருக்கும் படம் மாஸ்டர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா பாதிப்பால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று வரை படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் இருந்து வருகிறது. கரோனா பாதிப்பு முடிந்து, தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தை படக்குழு வழங்கியது.தற்போது இந்த டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடைசி வரை படத்தின் கதை என்னவென்று யூகிக்க முடியாத நிலையில் ஆக்ஷன் காட்சிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் டீசரை பார்த்துவிட்டு குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.