மாஸ்டர் திரைப்படம் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்கள் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களிலும் இப்படத்திற்கு செம வசூல் வந்துள்ளது.
அண்மையில் தான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்தில் செம ஹிட்டானது வாத்தி கம்மிங் பாடலும், அதில் விஜய் போட்ட நடனமும் மக்களிடம் அதிகம் பிரபலம்.
வாத்தி கம்மிங் பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி நிறைய வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார். மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர் தினேஷ் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.