பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணத்துடன் வெளியேறியது யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பொங்கல் செலிபிரேஷன் போய் கொண்டிருக்க, ட்விஸ்ட்டாக பிக்பாஸ் பணப்பெட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் பணம் அனுப்பி வைக்க அதை எடுத்து கொண்டு போட்டியாளர்கள் வெளியேறலாம். அந்த வகையில் கடந்த சீசனில் கவின் பணத்துடன் வெளியேற கேம்மின் முக்கிய மாற்றமாக அது இருந்தது.
எனவே, இந்த சீசனில் வெளியேறுவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த விஷயங்கள்தான் பிக்பாஸ் புரோமோவிலும் ஹைலைட் ஆகியிருக்கிறது. இதில் பஸ்ஸர் அடிக்கும் போது பணம் வைக்கப்பட்டிருக்கும். அதை எடுக்கவில்லை என்றால் அடுத்த பஸ்ஸரில் அடுத்த நிர்ணயிக்கப்பட்ட தொகை வைக்கப்படும். இதில் ஆரி பணம் எடுப்பது போல காட்டப்பட்டுள்ளது.
ஆனால், கேபி பணம் எடுத்து கொண்டு வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




