விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. கடந்த 3ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை 18 போட்டியாளர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்றுள்ளனர். முதன் முறையாக திருநங்கையும், மாடலுமான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு நமீதா தான் திருநங்கையான கதையை பிக்பாஸ் வீட்டில் கூறினார். 15 வயது முதல் 18 வயது வரை தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் பகிர்ந்து, கண்ணீர் விட்டு கதறினார். அவருடைய கதையை கேட்ட 17 பேருமே அவருக்கு ஹார்டீன் தான் கொடுத்தார்கள். அதன் பின்னர் ரசிகர்களிடையேயும் நமீதாவிற்கு வரவேற்பு கூடியது, இந்நிலையில் அவர் நேற்றிரவு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு பிக்பாஸ் வீட்டிற்குள் செந்தாமரைக்கும், நமீதாவிற்கும் இடையே சண்டை வெடித்தது. ‘மயக்குற மாதிரி பார்ப்பியே’ அது மாதிரி சொல்லித்தா என செந்தாமரை கேட்க, அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளாத நமீதா, பின்னர் செந்தாமரை உடன் சண்டையிட்டார். அப்போது குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பாகவும் செந்தாமரை பேச, நமீதா அதைப் பத்தி மட்டும் யாராவது பேசுனீங்கன்னா அசிங்க, அசிங்கமா கேட்பேன் என ஆத்திரமானார்.
இதை மட்டும் தான் ஆன் கிரீனில் காண்பித்து இருக்கிறார்கள், அதன் பின்னர் கோபம் தலைக்கேறி நமீதா நள்ளிரவில் மிகவும் ஆக்ரோஷமாக கத்தியுள்ளார். என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் மதிப்பதில்லை, பின்னால் நின்று தவறாக பேசுகிறார்கள் என கூறி ஆத்திரப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் கோபம் தலைக்கேறிய நமீதா, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த படுக்கையை கிழித்து, சேர் டேபிளை எல்லாம் உடைத்து பிரச்சனை செய்துள்ளார். இதனால் அரண்டு போன பிக்பாஸ் டீம், நமீதாவை வெளியே அழைத்து வர முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஒத்துழைப்பு தராமல், அதீத கோபத்துடன் செயல்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னரே அவரே அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமீதாவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.