சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன், விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தற்போது கமிட் ஆகியுள்ளார்.

தமிழ்த்தொலைக்காட்சி சீரியல்களின் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமா களத்திற்குள் அடியெடுத்து வைத்தார். இப்படம் வெற்றி அடைந்ததையடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புள்ள வர தொடங்கிவிட்டன.

மேலும் இவர் மற்றம் வெங்கட் பிரபு, வைபவ் நடித்த லாக்கப் திரைப்படம் இம்மாதம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பல்வேறு படங்களில் நடித்துவரும் இவருக்கு அடுத்தப்படியாக விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிகவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளாராம். மேலும் இப்படம் குறித்த முழு விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.




