’’எதற்காகவும் சென்னை கிங்ஸ் அணியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்டது தோனி தலைமையிலான சென்னை அணி. இந்நிலையில் பலரும் அந்த அணிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தந்த வண்ணம் உள்ளனர்.
கேப்டன் என்ற காரணத்தால் எங்கும் ஓடி ஒளிய முடியாது என சென்னை அணியின் கேப்டன் தோனி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
கேப்டன் என்ற பொறுப்பு உள்ள காரணத்தால் தன்னால் ஓடி ஒளிய முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்தப் போட்டி நடைபெறும் களம், சுழல், வீரர்களின் மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி தோல்வி அமைவதால் நிர்வாகமோ அதிகம் பதற்றம் அடையவில்லை; அடுத்தமுறை இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படும். இந்த தோல்வி வலிக்கிறது..இம்முறை ஓரிரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளோம்..எங்கு தவறுநடந்துள்ளது என்பது குறித்து யோசித்து அதை கலைவோம் என்று தெரிவித்தார்.
.அடுத்த முறை சென்னை கிங்ஸ் அடிபட்ட சிங்கத்தின் மூச்சுக் காத்துபோல் சிறப்பாக வெறியாகச் செயல்படலாம் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகை வரலட்சுமி சரத்குமார், ’’எதற்காகவும் சென்னை கிங்ஸ் அணியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாகத்துணை நிற்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.